படகுகளுடன் தாயகம் திரும்பிய 22 தமிழ்நாட்டு மீனவர்கள்

படகுகளுடன் தாயகம் திரும்பிய 22 தமிழ்நாட்டு மீனவர்கள்

மீனவர்கள் விடுதலை 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் இரண்டு நாட்டு படகுடன் பாம்பன் வடக்கு கடற்பகுதியை வந்தடைந்தனர்.

பருத்திதுறை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை 22 பேரை கைது செய்து, 2 இரண்டு நாட்டு படகுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியது இந்நிலையில் ஒரு நாள் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மீனவ சங்கத்தினர் சந்தித்து இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 22 மீனவர்களையும் இரண்டு நாட்டுபடகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு வலியுறுத்தியதன் பெயரில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட வெளியுறவு துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுடன் கேட்டுக் கொண்டனர். நல்லிணக்க அடிப்படையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு நாட்டுப் படகையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை இரண்டு நாட்டு படகுடன் இலங்கை கடற்படை நடுக்கடலில் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்பின் மீனவர்கள் படகுகளில் பாம்பன் துறைமுகம் வந்தடைந்தனர்.

Tags

Next Story