தூத்துக்குடியில் நீட் எழுதும் 2213 மாணவ மாணவிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மூன்று மையங்கள் மூலம் 2213 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர் .
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மூன்று மையங்கள் மூலம் 2213 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர் .
தமிழகம் முழுவதும் இன்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி ஆறுமுகநேரி திருச்செந்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ம நீட் தேர்வு மையங்கள் மூலம் 2213 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் இன்று பிற்பகல் 2 மணி முதல் தேர்வுகள் துவங்க உள்ளது இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் நீட் தேர்வு நடக்கும் மையங்களுக்கு வருகை தந்தனர் தூத்துக்குடி அழகர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்திற்கு வந்த மாணவ மாணவிகளின் ஹால் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டு முதலில் சரிபார்க்கப்பட்டு பின்னர் மெட்டல் டிடெக்டர் கொண்டு மாணவ மாணவிகள் சோதனைக்கு பின்பு தேர்வு மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் தேர்வு மையம் உள்ளே சென்ற மாணவ மாணவிகளின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பின்பு செல்போனில் அவர்களது புகைப்படம் எடுக்கப்பட்டு தேர்வு எழுதும் க்ஷ அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் ஒன்றரை மணிக்குள் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் மையத்திற்கு வர வேண்டும் அதற்கு பின்பு வரும் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் சுடிதார் மற்றும் ஃபேன்ட்சர்ட் அணியாமல் சாதாரண கேசுவல் டீசர்ட் மற்றும் ட்ராக் சூட் ஆகியவளை அணிந்து தேர்வு எழுத வந்திருந்தனர்.
Next Story