திருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2.49 கோடி வருவாய்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.2.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் சிவகாசி உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 188 ரூபாயும், கோசாலை பராமரிப்பு ரூ.49,083, மற்றும் யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1,19,428 என மொத்தம் உண்டியல்களில் ரூ.2.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 1100 கிராம் தங்கமும், 24 ஆயிரம் கிராம் வெள்ளியும், 47 ஆயிரம் கிராம் பித்தளை, 5ஆயிரம் கிராம் செம்பு, 5ஆயிரம் கிராம் தகரம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 326 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது.