25 கம்பெனி துணை ராணுவப்படை இன்று வருகை - சத்ய பிரதா சாகு

25 கம்பெனி துணை ராணுவப்படை இன்று வருகை - சத்ய பிரதா சாகு

சத்யபிரத சாகு 

மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையை கேட்டிருந்த நிலையில், 25 கம்பெனிகளை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 25 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளபட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஜிபி மகேஷ் அகர்வால், ஜெயராம், ஐஜி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சதியபிரதப் சாகு 25 கம்பெனி துணை ராணுவ படையினர் எந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, யார் எந்த பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும். 200 கம்பெனிகள் கேட்டிருந்த நிலையில் 25 கம்பெனிகளை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளனர். என‌ கூறினார்.

Tags

Next Story