ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்!

armstrong murder case

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தபட உள்ளதால் ஆட்சிய அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், வழக்கறிஞர் அருள், சிவசக்தி, ஹரிஹரன், மலர்க்கொடி, அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், ரவுடி நாகேந்திரன் , ரவுடி புதூர் அப்பு , சீசிங் ராஜா உள்ளிட்ட 26 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேருக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் குமார், விஜயகுமார் மற்றும் திருவள்ளூர் நத்தமேடு நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்களையும் கடந்தவாரம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 26 பேரும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர் படுத்தபடவுள்ளதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags

Next Story