காணாமல் போன 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது - இந்து சமய அறநிலைத்துறை.

காணாமல் போன 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது - இந்து சமய அறநிலைத்துறை.

பைல் படம் 

கோவில் சிலைகள் திருட்டு, சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்த விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரத்து 812 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள், குளங்கள், கட்டிடங்கள், காலிமனைகள் மீட்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. தமிழகத்தில் கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. காணாமல் போன 1,424 சிலைகளில், 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என்றும் கோவில் சிலைகள் திருட்டு, சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்த விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story