2,800 லி., கள்ளச்சாராயம் பறிமுதல்

2,800 லி., கள்ளச்சாராயம் பறிமுதல்

கரிய கோவில் அருகே கிராங்காடு பகுதிகளில் 2,800 லி., கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழிக்கப்பட்டது. 

கரிய கோவில் அருகே கிராங்காடு பகுதிகளில் 2,800 லி., கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன மலையில் உள்ள கரிய கோவில் எல்லைக்குட்பட்ட கிராங்காடு பகுதிகளில் சாராய வியபாரிகள் ரகசியமாக கள்ளச்சாரயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கருமந்துறை தனிப்படை போலீசார் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து அந்த பகுதியில் சல்லடை போட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு இடத்தில் பேரல்களில் சாராய ஊறல் போட்டு வியாபாரிகள் பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். மொத்தம் 14 பேரல்களில் சுமார் 2,800 லிட்டர் கள்ளச்சாரய ஊறல் கண்டுபிடித்து அவற்றை கீழே கொட்டி அழித்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கரிய கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் காயச்சுவதற்கு ஊறல் போட்ட கும்பல்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story