2வது நாளாக மத்தியக்குழு ஆய்வு: தமிழக அரசுக்கு பாராட்டு

2வது நாளாக மத்தியக்குழு ஆய்வு: தமிழக அரசுக்கு பாராட்டு

மத்திய குழு ஆய்வு 

தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பினை தமிழக அரசு முறையாக கையாண்டு, உடனடியாக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக மத்திய குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச. 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், விளைநிலங்களுக்கு மழை நீா் புகுந்தது. இதனால், பொதுமக்களின் உடைமைகள், விளைநிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனை மத்திய குழுவினா் கடந்த டிச. 20, 21ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனா். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கீா்த்தி பிரதாப் சிங் தலைமையிலான 7போ் கொண்ட மத்திய குழுவினா் இரண்டாம் கட்ட ஆய்வுப் பணியை நேற்று முன்தினம் துவங்கினர். நேற்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலா் - வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே. பிரபாகா், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோருடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக் குழுவினா் "தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை மற்றும் அதனால் உண்டான வெள்ள பாதிப்பினை தமிழக அரசு முறையாகக் கையாண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story