2 வது நாளாக அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம்

2 வது நாளாக அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு அதிமுக தலைமை அலுவலகத்தில் 2 வது நாளாக இன்று வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இன்று சோழிங்கநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ, அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக உள்ள கே.பி.கந்தன் மகன் 182 ஆவது வார்டின் கவுன்சிலராகவும், அது போல் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார் கே. பி. கே. சதீஷ் குமார் அவர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தென் சென்னை தொகுதியில் தான் போட்டியிடவும், பொதுச் செயலாளர் போட்டியிடவும் விருப்ப மனு பெற்றுள்ளார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான கே பி முனுசாமி மகன் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெற்று சென்றார். அதே போல் கே பி அன்பழகன் மகன் சந்திர மோகன் பெயரில் தர்மபுரி தொகுதிக்கு விருப்ப மனு வாங்கப்பட்டது .

Tags

Next Story