இடைநிலை ஆசிரியர்கள் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்!

இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்ததை கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்கக் கல்வித்துறையில்‌ பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களுள் 2009ம் ஆண்டு மே 31ம் தேதிக்குப் பின்னர் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓரு ஊதியத் தொகுப்பும், 2009 ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதைவிட குறைவான ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் ஊட்டி முதன்மை கல்வி அலுவலகம் முன் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story