ஆழ்வார்பேட்டை மதுபான விடுதி விபத்தில் 3 பேர் பலி

விபத்து
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை கீழே விழுந்தது. இதில் அங்கு பணியாற்றக்கூடிய 3 பேர் மீது விழுந்தது. இந்நிலையில் அவர்களை மீட்ப்பதற்காக தீயணைப்புதுறை,தேசிய பேரிடர் மீட்பு குழு அங்கு வந்தடைந்தது. சிக்கியவர்கள் இறந்த நிலையில் உடல் மீட்க்கப்பட்டு இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வந்த சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் தர்மராஜ், மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிர் இழந்துள்ளதாகவும்,அவர்களின் உடல் மீட்க்கப்பட்டு இராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தையும்,இருவர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேரும் தனியார் மதுபான விடுதியில் வேலை செய்தவர்கள் என தெரிவித்தார்.
கட்டிட மேற்கூரை ஏன் விழுந்தது என்பது குறித்து அதற்கான நிபுணர்கள் தான் தெரிவிக்க முடியும் என கூறினார். கட்டிடத்தின் இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கவில்லை அனைவரையும் பாதுகாப்புடன் வெளியேற்றிவிட்டதாக தெரிவித்தார்.விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். பின்னர், சம்பவம் நடந்த பகுதிக்கு ஆய்வு செய்ய சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் வந்தார்,
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர், விரைந்து வந்து செயல்பட்டதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். லைசென்ஸ் பெற்று தான் பார் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர் திருச்சியை சேர்ந்தவர் அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற நேரத்தில் மெட்ரோ பணி நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். தற்போது விபத்து நடந்த பாருக்கு சீல் வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து உயிரிழந்துள்ள மற்ற நபர்கள் உறவினர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும், முழுமையான விசாரணை அனைத்து தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
