ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் நாட்டு கொடியை பறக்க விட்ட 3 பேர் கைது

கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் நாட்டு கொடியை பறக்க விட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பழமையான ஏ.வி மேம்பாலத்தில் நேற்று பிற்பகல் திடீரென இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக் கொடிகள் அச்சிடப்பட்ட பாரத் வித் இஸ்ரேல் என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை பறக்கவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார்கள். மேலும் பயங்கரவாதத்தை முறியடிக்க இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.இந்தியா இந்து நாடு என்றும் முழக்கங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த மதிச்சியம் போலீசார் பதாகையை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பிரவீன்,பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் ரகுபதி, இளைஞர் அணி துணைத்தலைவர் சரத்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். போக்குவரத்து நிறைந்த கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் ஏவி மேம்பாலத்தில் திடீரென 3 இளைஞர்கள் இஸ்ரேல் நாட்டு கொடியை பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story