தோவாளை பூ மார்க்கெட்டில் 300 டன் பூக்கள் விற்பனை

தோவாளை பூ மார்க்கெட்டில் 300 டன் பூக்கள் விற்பனை

தோவாளை பூ மார்கெட்


குமரி மாவட்டத்தின் தோவாளை பூ மார்கெட் மிகவும் பிரபலமானதாகும். இங்கு குமரி மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது ஆயுத பூஜையையொட்டி இன்று பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது. பூக்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர்.

இதனால் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை, பிச்சி பூக்களின் விலை வழக்கத்தை விட 2 மடங்கு உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை யானது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.தாமரை பூக்கள் விற்பனைக்கு குறைவாக வந்திருந்தது. இதனால் தாமரை பூவின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.100, மஞ்சள்செவந்தி ரூ.170, வெள்ளை செவந்தி ரூ.200, அரளி ரூ.290-க்கு விற்பனை யானது. ஆயுத பூஜையையொட்டி ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்கள் வாங்க வந்திருந்ததால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. கடந்த 2 நாட்களில் வழக்கத்தை விட சுமார் 300 டன் பூக்கள் விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது.

Tags

Read MoreRead Less
Next Story