260 திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கட்டண கருவி
கையடக்க கட்டண கருவிகள் வழங்கல்
திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கருவிகளை (Point of Sale Terminal) மண்டல இணை ஆணையர்களிடம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருக்கோயில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையில் இரண்டாம் கட்டமாக 260 திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கருவிகளை (Point of Sale Terminal) மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா. தனி அலுவலர்கள் (ஆலய நிலங்கள்) விஜயா, ஜானகி, இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Next Story