35 சதவீத ஊதிய உயர்வு - முதல்வருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்.

35 சதவீத ஊதிய உயர்வு - முதல்வருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்.

நன்றி தெரிவிப்பு கூட்டம் 

35 சதவீத ஊதிய உயர்வு வழங்கிய தமிழக முதல்வருக்கு பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 35 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பாலக்கோடு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு தொ.மு.ச பாலக்கோடு கிளை செயலாளர் மணி, பொருளாளர் ஜம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல வருடங்களாக பணியாற்றி வரும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு இதுவரை குறைந்த அளவு சம்பளமே வழங்கி வந்த நிலையில், தொழிலாளர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகளை பரிசிலித்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 35 சதவீதம் ஊதியம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து தமிழக முதல்வருக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொது செயலாளர் சண்முகம் ஆகியோருக்கு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தொ.மு.ச.நிர்வாகிகள் கப்ரமணி, மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், சரவணகுமார் மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தொ.மு.சதுணை செயலாளர் செல்வகுமார் நன்றி தெரிவித்தார்.



Tags

Next Story