3500 வீடுகள், 175 சாலைகள் சேதம் - தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக 3500 வீடுகள் மற்றும் 175 சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழையின் போது தூத்துக்குடி மாநகரத்தை ஒட்டி உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மாநகரம் மற்றும் புறநகர் பகுதி வெள்ளப்பெருக்காக மாறியது. அந்த கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணி முழுகிச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணியை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையினால் 150 இடங்களில் பல்வேறு குளங்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் முக்கிய சாலைகள் பாலங்கள் 175 இடங்களில் உடைந்துள்ளது. எங்கே அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இரண்டு நாட்களில் முழுமையாக முடிவடையும். மாவட்டத்தில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, மின்சார வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. சாலைகள் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது கணக்கெடுப்பு பணி முடிவடைந்த பின்னர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார். ஆய்வின்போது தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாக ஆணையர் ஜே டி பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story