தமிழக ஆந்திர எல்லையில் 3.84 லட்சம் பணம் பறிமுதல்!
அதிகாரிகள் விசாரணை நடத்திய போது
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
காட்பாடி அருகே ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 3.84 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் இன்று (19.03.2024) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே காரில் வந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுலோச்சனா தேவி (47) என்பவர் ரூ.3.84 லட்சம் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்தது தெரிந்தது. பின்னர் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Next Story


