4 மடங்கு வாக்குப்பதிவு குறைவு - இராதாகிருஷ்ணன்
2019 தேர்தலை காட்டிலும் இந்த முறை நான்கு மடங்கு வாக்குப்பதிவு குறைவாக உள்ளது என மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ராதா கிருஷ்ணன் சென்னை லயோலா கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வடசென்னையில் பதிவான அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் ராணி மேரி கல்லூரிக்கு வந்துள்ளது. லயோலா கல்லூரிக்கு வாக்குப்பதிவு எந்திரம் வருகை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் இன்னும் முழுமையாக வரவில்லை அங்கு 600 கிலோமீட்டர் வாக்குச்சாவடிகள் இருப்பதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. 60.31 விழுக்காடு வடசென்னை 54.27 விழுக்காடு மத்திய சென்னை 53.91 விழுக்காடு தென்சென்னையில் வாக்கு பதிவாகி இருக்கிறது. 188 கேமராக்கள் பொருத்தப்பட்டு நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மத்திய சென்னை வாக்கு எண்ணிக்கை மையத்தை பொருத்தவரை சீல் செய்த பிறகு யாரும் உள்ளே செல்ல முடியாது. மொத்தமாக 1095 பேர் மத்திய சென்னை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் . ஜூன் 4 ஆம் தேதி வரை முழு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் இருக்கும். 2019 தேர்தலை காட்டிலும் இந்த முறை நான்கு மடங்கு வாக்குப்பதிவு குறைவாக உள்ளது.
Next Story