40 இலட்சம் மீன்குஞ்சுகளை ஆறுகளில் விடுவதற்காக நடவடிக்கைகள் .அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

40 இலட்சம் மீன்குஞ்சுகளை ஆறுகளில் விடுவதற்காக நடவடிக்கைகள் .அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

மீன் குஞ்சுகள்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில் மீன்குஞ்சுகளின் வளத்தினை பெருக்கிடும் நோக்கத்தோடு ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளான தாமிரபரணி, காவிரி மற்றும் பவானி போன்ற ஆறுகளில் கரையோரம் இருக்கின்ற மீளவர்கள் பயன்பெறும் வகையில் நாட்டின மீள்குஞ்சுகளின் வளத்தினை பெருக்கிடும் நோக்கத்தோடு ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் கடந்த வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடத்திற்கான திட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பவானி ஆற்றுப்படுகையில் சுமார் இரண்டு இலட்சம் மீன்விரலிகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் வகையிலும், நன்கு வளர்ந்த நாட்டின மீன்குஞ்சு விரலிகளான கட்லா, ரோகு, மிர்கால், கல்பாசு மற்றும் சேல்கெண்டை ஆகியவற்றை இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏறத்தாள சுமார் 40.00 இலட்சம் மீன்குஞ்சுகளை ஆறுகளில் விடுவதற்காக மீன்வளத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மீன் உற்பத்தியினை பெருக்கி மீனவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story