திமுக ஆட்சியில் 40சதவீதம் விலைவாசி உயர்வு: எடப்பாடி பழனிச்சாமி
திமுக ஆட்சியில் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பர்கூரில் குற்றம் சாட்டியுள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த விழா இன்று நடைபெற்றது.
இதில் அக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கலந்துக் கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றோம். கொரோனோ தொற்று நோய் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்ட போது கூட வரிகளை உயர்த்தாமல் விலைவாசி உயரவில்லை.
ஆனால் தற்போது 40 சதவீத அளவிற்கு விலைவாசி உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்க பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் மற்றும் எண்ணற்ற கலைக் கல்லூரிகளை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டோம். இதனால் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 32 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக உயர்ந்தது.
ஒரே ஆண்டில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டினோம். தற்போதைய திமுக ஆட்சியில் 2.54 லட்சம் கோடி கடன் வாங்கி எந்த திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. கடன் சுமைதான் அதிகரித்தது. அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் பல நிறைவேற்றி ஏழை , எளிய நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தினோம்.
ஆனால் தற்போது திட்டங்களை அறிவித்து விட்டு குழுக்களை அமைத்து விடுகின்றனர். ஆனால் தொடர்ந்து செயல்படுத்துவது இல்லை. இதனால் எல்லா திட்டங்களும் பாதியிலேயே இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்ள பட்டு வருகிறது கூறினார்.