சத்தியமங்கலம் அருகே 40.50 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்
வளர்ச்சி திட்ட பணிகள்
ஈரோடு சத்தியமங்கலம் அருகே 40.50 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராஜன் நகர் ஊராட்சி புது குய்யனுர் பகுதியில் கான்கிரீட் தளம் 10 லட்சம் மதிப்பீடு மற்றும் புது வடவள்ளி விவசாய கிடங்கு 18 லட்சம் மதிப்பீடு மற்றும் கஸ்தூரி நகர் கான்கிரீட் தளம் 5 லட்சம் மதிப்பீடு ராஜநகர் கான்கிரீட் தளம் 5 லட்சம் மதிப்பீடு போக்கககைரை கான்கிரீட் தளம் 2.50 லட்சம் மதிப்பீடு ஆகிய பணிகளை சத்தி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே சி பி இளங்கோ அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ எ தேவராஜ், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சுப்புலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா மணி, சத்தி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கே கே சேகர், துணைச் செயலாளர் சுப்பிரமணியன் அசோகன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் சி ஆர் செல்வராஜ் ரமேஷ் குமார் ஆறுமுகம் மற்றும் சௌந்தர்ராஜன் தங்கராஜ் ராஜேந்திரன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தோஷ் குமார், நவீன் குமார், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் தெளிவாக கலந்து கொண்டனர்.
Next Story