குவைத் தீ விபத்தில் 43 பேர் உயிரிழப்பு - ராமதாஸ் இரங்கல்

குவைத் தீ விபத்தில் 43 பேர் உயிரிழப்பு - ராமதாஸ் இரங்கல்

பைல் படம் 

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உயிரிழந்த தமிழர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் இந்தியர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குவைத் தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags

Next Story