தமிழகத்தில் தொடர்ந்து 5 - நாட்களுக்கு நீடிக்கும் கோடை மழை !!!

தமிழகத்தில் தொடர்ந்து 5 - நாட்களுக்கு நீடிக்கும் கோடை மழை !!!

கோடை மழை

தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

அது மட்டுமில்லாமல் குமரி கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, எனவே இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வர லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

15ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல் ,தேனி, மதுரை ,விருதுநகர் ,தென்காசி ,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பதினாறாம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல் ,கருவூர், திருச்சி, மதுரை,சிவகங்கை விருதுநகர் ,தஞ்சாவூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ,தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags

Next Story