இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் 5 பேர் படுகாயம்

இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் 5 பேர் படுகாயம்
X

இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் 5 பேர் படுகாயம்

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சின்னசேலம் அடுத்த செம்பாகுறிச்சி சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பபிதா,29; இவர் தனது ஸ்கூட்டிக்கு நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் கீழ்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு வந்தார். அப்போது சின்னசேலம் - வேப்பூர் நோக்கி சென்ற கார், பெட்ரோல் பங்க் எதிரே திடீரென ஸ்கூட்டி மீது மோதியது. தொடர்ந்து விபத்தில் நிலைதடுமாறிய கார், அவ்வழியாக சென்ற மற்றொரு பைக் மீதும் மோதியது. இந்த விபத்தில் பபிதா, பைக்கில் சென்ற ராயர்பாளையம் பொன்னுசாமி,48; தங்கவேல்,62; காரில் சென்ற சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த சிவஞானம்,57; செல்வராஜ்,57; உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்தனர். புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story