செய்யாறில் 5.75 சவரன் நகை கொள்ளை

செய்யாறில் 5.75 சவரன் நகை கொள்ளை

கொள்ளையடிக்கப்பட்ட வீடு


செய்யாறு கிருஷ்ணா நகரில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து ஐந்தே முக்கால் சவரன் நகை 50 கொள்ளை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கலைக்கல்லூரி எதிரே கிருஷ்ணா நகரில் வசிப்பவர் சரவணன் (28) மாங்கால் கூட்ரோடு சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனி ஊழியர் இவரது மனைவி பிரியா (23) இவருக்கு இரண்டு மகன்கள், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சரவணன் தந்தை கம்பன் நகரில் வசித்து வருகின்றனர். வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கிருஷ்ணா நகரில் உள்ள பாலு தெருவ வீட்டிற்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆளில்லா வீட்டின் பூட்டு காதை அறுத்து பூட்டை தனியே வீசி விட்டு ஹாலில் இருந்த சாவியை தேடி எடுத்து படுக்கை அறையை திறந்து டிரெஸ்ஸிங் டேபில் மற்றும் பீரோவில் இருந்த நகை பணம் ஆகியவற்றை ஆராய்ந்து உடமைகளை களைத்து ஐந்தே முக்கால் சவரன் நகை ,50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளில்லா வடதண்டலம் ஏரிக்கரை ஓரம் ஓதுக்கு புறமாக உள்ள வீட்டில் புகுந்து நகை பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story