தாளவாடி அருகே சீட்டு விளையாடிய 6 பேர் கைது

தாளவாடி அருகே சீட்டு விளையாடிய 6 பேர் கைது

சீட்டு

தாளவாடி அருகே சீட்டு விளையாடிய 6 பேர் கைங
தாளவாடி அருகே சீட்டு விளையாடிய 6 பேர் கைது சத்தி, ஜுலை. 10 - ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்த தொட்ட முதுகரை கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடத்தில் சீட்டு கட்டை வைத்து வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடி கொண்டு இருந்த தொட்ட முதுகரை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (75), சிவப்பா ( 55 ), நாகேந்திரா (39) ,செல்வராஜ் ( 65 ), கல்மண்டிபுரத்தைச் சேர்ந்த குருசாமி (40 ) மற்றும் கர்நாடகா மாநிலம், கொள்ளேகாலைச் சேர்ந்த சித்தப்பா ( 40 ), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் ரூ.16 ஆயிரத்து 500 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் தாளவாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story