61 பேருக்கு பதவி உயர்வு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

61 பேருக்கு பதவி உயர்வு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோப்பு படம்

மாவட்ட நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.மாவட்ட நீதிபதிகளாக 61 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மாவட்ட நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மாவட்ட நீதிபதிகளாக 61 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக எம். சாய்சரவணன் சென்னை உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவின் பதிவாளராக பணியாற்றிய நிலையில் பதவி உயர்வு பெற்றார். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருந்த ஜெஷிந்தா மார்டின், சென்னை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பிரிவின் பதிவாளராக பதவி உயர்வு சென்னை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த லதா சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் பதிவாளராக நியமனம் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு பிரிவின் பதிவாளராக இருந்த மாவட்ட நீதிபதி சீதாராமன் சென்னை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பிரிவின் கூடுதல் பதிவாளராக நியமனம். தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையத்தின் கூடுதல் இயக்குனராக இருந்த சத்தியா தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தின் இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.

திருநெல்வேலி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய குமரேசன் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தின் கூடுதல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற ஆள்சேர்ப்பு பிரிவின் கூடுதல் பதிவாளராக பணியாற்றிய திருவேங்கட சீனிவாசன், அதே பிரிவின் பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய கிருபாகரன் மதுரம், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story