தமிழகத்தில் இதுவரை 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி

முதலமைச்சர் மு க ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் இதுவரை 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையோட்டி , அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும் மற்ற கட்சிகள் 20 பேரையும் தங்களது கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர பேச்சாளர்களுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர்ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன்,பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. திமுக நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாமக கட்சிகள் இதுவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்கவில்லை.

Tags

Next Story