தூத்துக்குடியில் 66.88% வாக்குப் பதிவு - ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தூத்துக்குடியில் 66.88% வாக்குப் பதிவு -  ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 66.88% வாக்காளர்கள் தங்களின் வாக்கினை செலுத்தியுள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 1624 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மிகவும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் நடைபெற்றது. இத்தொகுதியில் 472056 ஆண் வாக்காளர்களும் 503325 பெண் வாக்காளர்களும் மற்றும் 87 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 975468 (66.88%) வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். என செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story