சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 6-வது நாள் நவசண்டி யாகம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 6-வது நாள் நவசண்டி யாகம்
X

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் 6 வது நாள் நவசண்டி யாகம்

யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. ஊர் மக்களின் நலனுக்காகவும், நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந் தேதி நவசண்டி யாகம் தொடங்கியது. நேற்று 6-வது நாளாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், சப்தசதி பாராயண ஹோமம், 13 அத்தியாய ஹோமம், சுகாசினி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா சிவராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Tags

Next Story