தேர்தல் விதிகளை மீறியதாக 75 வழக்குகள் பதிவு!

தேர்தல் விதிகளை மீறியதாக 75 வழக்குகள் பதிவு!

வழக்கு

பல்வேறு கட்சியினர் விதிமீறியதாக சுமார் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் கட்சியினர் விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதியின்றி சுவர் விளம்பரம் வரைதல், ஊர்வலம் செல்லுதல், கூட்டம் நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் விதிமீறியதாக சுமார் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வேலூர் போலீசார் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story