பிப்.21ல் மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு தொடக்க விழா

பிப்.21ல் மக்கள் நீதி மய்யத்தின்  7ம் ஆண்டு தொடக்க விழா

மக்கள் நீதி மய்யம் 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா கமல்ஹாசன் தலைமையில் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பிப் 21ம் தேதி காலை 10மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மையம் கொடியினை ஏற்று வைத்து ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார். நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளை சேர்ந்த மண்டல, மாவட்ட, நகர, வட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு நாடாளுமன்றத்தில் நம்மவர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story