தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்கள் கன மழைக்கு வாய்ப்பு - வானியல் ஆய்வு துறை எச்சரிக்கை !!!!

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்கள் கன மழைக்கு வாய்ப்பு - வானியல் ஆய்வு துறை எச்சரிக்கை !!!!

Rain

தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை ,தேனி ,திண்டுக்கல் ,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த மழை வரும் 14ஆம் தேதி வரை தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் மட்டுமின்றி மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி ஈரோடு வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாமக்கல் ,சேலம், தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் அதாவது 38 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் வாட்டியது.

Tags

Next Story