சென்னை மெட்ரோ இரயில்களில் 86.82 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ இரயில்களில்  86.82 லட்சம் பயணிகள் பயணம்

பைல் படம் 

கடந்த மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்தனர்.

சென்னை மெட்ரோ இரயிலில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 67 ஆயிரத்து 449 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது; 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதம் மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 4 ஆம் தேதி அன்று 3,34,710 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024, மார்ச் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 34,62,083 பயணிகள் (Online QR 2,05,653; Static QR 2,47,977; Paper QR 20,05,931; Paytm 4,00,963; Whatsapp - 3,81,369; PhonePe – 2,12,237; ONDC – 7,953), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 37,64,044 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 54,849 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,512 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13,95,969 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Tags

Next Story