கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழித்தூம்பு கண்டறியப்பட்டது

கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழித்தூம்பு கண்டறியப்பட்டது

தூத்துக்குடி அருகே பட்டிணமருதூர் பகுதியில் உள்ள கண்மாயில் 1200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கண்டறியப்பட்டுள்ளது.


தூத்துக்குடி அருகே பட்டிணமருதூர் பகுதியில் உள்ள கண்மாயில் 1200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கண்டறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே பட்டிணமருதூர் பகுதியில் உள்ள கண்மாயில் 1200 ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் தூத்துக்குடியினை சேர்ந்த தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர் ராஜஷ் செல்வரதி மற்றும் அவ்வூரினை சேர்ந்த நாகராஜன் ஆகியோர் 26.05.2024 அன்று மாலை கண்மாய் பகுதியில் மேற்பரப்புகளில் கள ஆய்வு மேற்கொண்டபோது சர்வே எண் 154க்கு மேற்கே கண்மாய் கரையில் இருந்த் சுமார் 200அடி தூரத்தில் உள்பகுதியில் இரட்டை தூணுடன் தற்போது சுமார் 7அடி உயரம் மட்டும் தரைக்கு மேல் காணப்படும் மண் கல்லால் வடிவமைக்கப்பட்ட மிக தொன்மையான குமிழித்தூம்பு இருப்பதை கண்டறிந்தார்.

இதன் மொத்த உயரம் 12 அடி வரை இருக்கலாம் என்றும் கல்லின் தன்மை மற்றும் சிதைவுகளை ஆய்வு செய்த போது பொ.ஊ. 8 - 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதன் மையம் மற்றும் மேல் பகுதியிலுள்ள இரு குறுக்கு தூண்கள் நிலைநிறுத்துவதற்கான செவ்வக வடிவிலான பள்ளங்கள் மட்டும் தரையின் மேல் பகுதியில் தென்படுகின்றன. ஆனால் இரு குறுக்குச்சட்ட தூண்களும் தென்படவில்லை என்றும் மூன்றாவது குறுக்கு தூணின் கீழ்பகுதி மண்ணிற்குள் புதையுண்டு இருப்பதால் அதனை ஆய்வு செய்தால் காணப்பெறலாம் என்றும். சர்வே எண் 165க்கு மேற்க்கே மடையில் தூம்பு துளை அடைப்பு கல் மட்டும் காணபட்டது. ஆனால் குமிழ்தூம்புவினை காணவில்லை.

இந்தபகுதியில் நிறைய கற்சிதைவுகள் காணப்படுகின்றன. இத்தகைய தொன்மையான குமிழ்தூம்பு அமைப்பானது இந்த பகுதியான கீழ பட்டிணம்(வணிக நகர) நாகரீகத்தின் தொன்மைக்கும், நீர் மேலான்மைக்கும் சான்றாக விளங்குவதாகவும், இந்த துறைமுக நகரமான பட்டிணமருதூரில் 9 -10ம் நூற்றாண்டுகளில் மலட்டாறு என்ற ஆறு ஓடியதாக வரலாற்றில் பதிவுள்ளதாகவும், இந்த ஆற்றின் வழித்தடம் குறித்த பொ.ஊ.1778ம் ஆண்டின் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ நடவடிக்கைகள் (History of the Military Transactions of the British Nation in Indostan) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரைபட ஆவணங்கள் அடிப்படையில் இந்த நதியின் வழித்தடத்தினை மறு சீரமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் தனது ஆய்வு கட்டுரையினை 20.05.2024 அன்று பதிவு செய்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவ்வாறு இந்த மலட்டாறின் வழித்தடத்தினை மீட்டெடுத்தால் இந்த பகுதிகளின் நீர் மேலான்மை மேம்படுவதோடு மட்டுமல்லாமல் நமது தூத்துக்குடி நகரமும் கங்கை கொண்டானுக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளாவது வெகுவாக குறையும் என்றும் தனது கோரிக்கையானது 23.05.2024 அன்று திருச்சி- இந்திய தொல்லியல் துறையின் கனிவான பரிசீலனைக்கு மாவட்ட ஆட்சியரால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். மேலும் இந்த பகுதி சர்வே எண் 166ல் காணப்படும் தொன்மையான சுமார் 20 - 25 அடி விட்டம் கொண்ட வட்டக்கிணறானது பாதுகாப்பற்ற நிலையில் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது என்றும் அதேபோல் சர்வே எண்167ல் வரைபடத்தில் காணப்படும் கிணற்றினை காணப்படவில்லை என்றும் இத்தகைய கிணறுகள் கோடைகாலத்திலும் வற்றாது தாகம் தீர்த்த கமலை கிணறுகளாக இருக்கலாம் என்றும் உடனடியாக கிராம நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இத்தகைய வரலாற்று சின்னங்களை பராமரித்து பாதுகாத்திட வேண்டும் என்றும் தனது கோரிக்கைகளை பதிவு செய்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமூகம் வேளாண்மை செய்வதற்கு ஏரி குளம் கண்மாய் போன்ற நீர்நிலைகளை உருவாக்கி அறிவியல் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்திய குமிழித்தூம்பு மூலம் பாசன செய்தது வியப்பாகத்தான் இருக்கிறது. குமிழித்தூம்பு : ஏரி, குளம்,கண்மாய் போன்ற நீர் நிலைகளுக்கு மழைநீர் வாய்க்கால் ஓடைகள் வழியாக நீர் வரும்போது நீரோடு களிம்பும் வண்டலும் சேர்ந்து வருவது நீர்நிலைகளில் தூர்ந்து போவதற்கு கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் "குமிழிகள்" ஏரிக்கரையில் மதகு போல் இருப்பதில்லை ஏரிக்கரையிலிருந்து சுமார் 200 முதல் 300 அடிகள் தள்ளி எரியின் உட்பகுதியில் இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப் பொறுத்து குமிழிகள் எண்ணிக்கை கூடும். ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கல் தளம் அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டி அமைத்து, மேற்பத்தில் நீர் போவதற்கு பெரிய "நீரோடித்துளை" உருவாக்கி சுரங்க கால்வாய் மூலம் ஏரிக்கும், வெளியே இருக்கும். பாசனக்கால்வாய் இணைத்து துளையிட்டு இருக்கும் பாசனத்திற்கு நீர் தேவைக்கேற்ப குறைக்கவும் கூட்டவும் தூம்புக்கல்லை பயன்படுத்தினார்கள்.

தூம்புக்கல்லை மேலும் கீழும் இயக்குமாறு கற் சட்டம் அமையபெற்றிருக்கும். கல் தொட்டியின் பக்கத்தில் மூன்று சிறு துளைகள் இடம் பெற்று இருக்கும் அவை சேரோடித்துளை என்பார்கள். பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு வலிமையானவர் நீந்தி சென்று தூம்பு கல்லை தூக்குவார்கள். இப்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். கல் சட்டத்தில் உள்ள அழுத்தம் குறைவாக இருக்கும் இதனால் சேரோடி துளை வழியே வண்டல், களிம்பு நிறைந்த நீர் வேகமாக வெளியே ஏறும்.நீரோடி துளை வழியாக 80 சதவீதம் நல்ல தண்ணீரும்,20 சதவீதம் மண் கூழ் தண்ணீர் வெளியேறும். நீரோருடன் சேர்ந்து மண் கூழ் வெளியேறுதால் சத்தான மண் பயிர்களுக்கு உரமாகவும், ஏரி பகுதியும் தூர் வழிந்து சுத்தமாக காணப்படும்.

Tags

Next Story