மதுரை ஸ்மார்ட் சிட்டிக்கு 8வது இடம்,ஈபிஎஸ்-க்கு பெருமை - ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,எடப்பாடியாரின் ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் இன்றைக்கு வளர்ந்து பயிராகி அது கழனிக்கு விருதாக வரக்கூடியதை நாம் பார்க்கின்றோம். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலே புரட்சித்தலைவி அம்மாஇருக்கின்றபோது இந்தியாவில் ஏறத்தாழ 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் தமிழகத்தில் மதுரை உட்பட 12 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நிலையில் திட்டங்கள் நிறைவு, நிதி பயன்பாடு உள்ளிட்ட அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்120 நகரங்களின் தரவரிசையில் 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டன இதில் சூரத், ஆக்ரா,அகமதாபாத், வாரணாசி, போபால், தும்குரு, உதயப்பூர், மதுரை, கோடா ,சிவமோகா ஆகிய நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது இதில் 8 வது இடத்தை மதுரை பிடித்துள்ளது. இதில் பின்தங்கிய நகரங்களின் தரவரிசை பட்டியலில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் வடகிழக்கு நகரங்கள் பின்தங்கி இருக்கின்றன.லட்சத்தீவு தொடங்கி அருணாச்சல பிரதேசம் வரை அந்த மாநகராட்சிகள் எல்லாம் பின் தங்கியிருக்கிறது சிறிய நகரங்கள் என்று காரணம் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நூறு நகரங்களில் இந்தியாவில் உள் கட்டமைப்பை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவதற்காக 2015 ஆண்டிலே கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியா முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதிலே 12 மாநகராட்சிகள் புரட்சித்தலைவி அம்மாவால் தேர்வு செய்யப்பட்டதில் 8 வது இடத்தை மதுரை பிடித்திருக்கிறது என்று சொன்னால் இந்த சாதனைக்கு, எடப்பாடியார் முழுமையான ஈடுபாடு தான் காரணம். இன்றைக்கு மதுரை இந்தியாவிலேயே பத்து இடங்களிலே 8 வது இடத்தை பிடித்திருப்பது எடப்பாடியார் அரசுக்கு கிடைத்திருக்கிற நற்சான்றிதழாக நாம் பார்க்கிறோம். மேலும் புரட்சித்தலைவி அம்மா கொடுத்த மழைநீர் சேகரிப்பு திட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. எடப்பாடியார் கொண்டு வந்த குடிமராமத்து திட்டம் இன்றைக்கும் பெய்கிற மழை நீர்நிலைகள் எல்லாம் தேக்கி வைக்கப்பட முடிகிறது. இன்றைக்கு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கின்ற வகையிலே 7.5% இட ஒதுக்கீட்டை இந்தியாவுக்கே முன்னோடியாக கொடுத்தவர் எடப்பாடியார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி பெற்றுக் கொடுத்தார், ஒரே ஆண்டிலே 6 புதிய மாவட்டங்களை உருவாக்கி கொடுத்தார்கள், 2000 அம்மா மினிகிளினிக் தொடங்கி ஏழை எளிய நடுத்தர மக்களுடைய மருத்துவத்திற்கு மகத்துவம் படைத்தார், அதே வரிசையில் நூறு நகரங்களில் தரவரிசை பட்டியலில் 8 வது இடத்தில் மதுரை இருப்பது எடப்பாடியார் ஆட்சி கிடைத்த சான்றாகும் இன்றைக்கு இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக அரசு இதுபோன்ற ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை பெறவில்லை, புதிய மருத்துவக் கல்லூரிகளை இன்றைக்கு பெறுங்கள் என்று சொன்னால் அதற்கு வழி இல்லை ஆனால் ஒரு பல் மருத்துவமனை தொடங்கி விட்டோம் என்று சாதனையாக ஒரு பல் போகிற அளவிலே நீங்கள் பேசுகிறார்கள். இன்றைக்கு திட்டங்களால் மக்கள் இதயங்களில் எடப்பாடியார் நிறைந்துள்ளார் . எடப்பாடியார் உருவாக்கிய வைத்துள்ள திட்டங்களைத் தான் இன்றைக்கு முதலமைச்சர் ரிப்பன் வெட்டி திறக்குகிறார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலே விழுந்து கிடக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மக்கள் தக்க பாடத்தை கொடுப்பார்கள், வீழ்ந்து கிடக்கிற தமிழகத்தை மீட்டெடுக்கவும், இன்றைக்கு தமிழகத்தை பல்வேறு துறைகளில் சீரழிந்து சின்னாபின்னம் ஆக்கி, தன்னுடைய வாரிசு அரசியல் வளர்ச்சிக்காக மட்டும் கவனம் செலுத்தி வரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இனியாவது தமிழக மக்கள் வளர்ச்சிக்காக கவனம் செலுத்துவாரா? என்று கூறினார்.