உத்திரமேரூர் ஏரியில் 900 கன அடி நீர் வெளியேற்றம்

உத்திரமேரூர் ஏரியில் 900 கன அடி நீர் வெளியேற்றம்

உத்திரமேரூர் ஏரியில் 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

உத்திரமேரூர் ஏரியில் 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி. 20 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் மூன்று கலங்கல் 18 மதகுகள் உள்ளன. மழைக்காலத்தில் ஏரி முழுமையாக நிரம்பினால், காட்டுப்பாக்கம், குப்பையநல்லுார், நீரடி, மேனலுார், அரசாணிமங்கலம், வேடபாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5,600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.

இந்த ஆண்டு பருவமழைக்கால துவக்கத்திலேயே செய்யாற்று நீர் வரத்து வாயிலாக உத்திரமேரூர் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த மாதம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், சில தினங்களாக பருவ மழை தீவிரம்அடைந்துள்ள நிலையில், ஏரிக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏரியின் முதலாம் கலங்கல் மற்றும் இரண்டாம் கலங்கல்கள் வழியாக, தலா 243 கன அடி நீரும், மூன்றாவது கலங்கல் வழியாக, 414 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு, 900 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story