தமிழகத்தில் 956 பள்ளி கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைப்பு

தமிழகத்தில் 956 பள்ளி கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைப்பு

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் ரூ.264 கோடி செலவில் கட்டிய 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறைக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Tags

Next Story