9 மற்றும் 10ம் வகுப்பு பாட புத்தகங்களில் திருத்தம் செய்யணும் !

9 மற்றும் 10ம் வகுப்பு பாட புத்தகங்களில் திருத்தம் செய்யணும் !

9 மற்றும் 10ம் வகுப்பு பாட புத்தகங்களில் தவறான பாடங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

9 மற்றும் 10ம் வகுப்பு பாட புத்தகங்களில் தவறான பாடங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்திலும், 10 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் சில பாடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும், என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து அறிவுறுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குனருக்கு எஸ் சி இ ஆர் டி கடிதம் எழுதி உள்ளது. 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் சில பத்திகள் மற்றும் வாக்கியங்களை நீக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு "பன்முக கலைஞர்"என்ற தலைப்பில் பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி மறைவு தினத்தை ஜூலை 7 என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக் கல்வித் துறைக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. கருணாநிதி மறைந்த தினம் ஆகஸ்ட் 7 குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story