ஆசனூர் அருகே தண்ணீருக்காக சுற்றி வரும் குட்டி யானை

ஆசனூர் அருகே தண்ணீருக்காக சுற்றி வரும் குட்டி யானை


ஆசனூர் அருகே சுற்றி வரும் குட்டி யானை கோடை வெயில் காரணமாக குட்டி யானைக்கு அப்பகுதி மக்கள் தண்ணீர் கொடுத்தனர்.


ஆசனூர் அருகே சுற்றி வரும் குட்டி யானை கோடை வெயில் காரணமாக குட்டி யானைக்கு அப்பகுதி மக்கள் தண்ணீர் கொடுத்தனர்.

ஆசனூர் அருகே ரோட்டில் சுற்றி வரும் குட்டி யானை சத்தி அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் வயது முதிர்ந்த சுமார் 45 வயது மதிக்க தக்க பெண் யானை ஒன்று குட்டியுடன் வனப்பகுதியில் இருந்த போது மயங்கி விழுந்தது. அதன் குட்டி யானை ஒன்று தவித்தபடி சுற்றிக் கொண்டு இருந்தது. குட்டியானை பண்ணாரி - பவானி சாகர் ரோட்டில் நடமாடியதை கண்ட வாகன ஒட்டிகள் உடனடியாக சத்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ரோட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் யானை படுத்து கிடப்பதை கண்டறிந்தனர். உடனடியாக வனத்துறை உயர் தகவல் தெரிவித்தனர். உடல் நலம் குன்றிய யானைக்கு டாக்டர்கள் குழு மருந்துவ சிகிச்சை அளித்தது. அதன் குட்டி அங்கும் இங்கும் சுற்றி வந்ததால் வனத்துறையினர் ஐந்து அடி ஆழத்தில் குழியை தோண்டி, அந்த குட்டியை அந்த குழிக்குள் வைத்து அதற்கு பால் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் பாதுகாப்பிற்கு ஆட்களை நியமித்து குட்டியானையை பாதுகாப்பாக கவனித்து கொண்டனர்.

வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டே குட்டி யானைக் கூட்டத்தில் சேர்க்க முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் சிசிச்சை பலனின்றி தாய் யானை உயிரிழந்து. 2மாத குட்டி என்பதால் பாலை தவிர புற்களை தின்னாது என்ற காரணத்தால் வனத்துறையின் யானை குட்டியை உறவின் முறை யானைக் கூட்டத்தில் சேர்த்து விட்டனர். குட்டியும் யானைக் கூட்டத்துடன் காட்டுக்குள் சென்றது. வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் குட்டி யானை மீண்டும் ரோட்டிற்கே வந்தது. தொடர்ந்து முயற்சி செய்தும் யானை கூட்டத்தில் குட்டியானை சேராமல் தனியே சுற்றி வந்தது. குட்டியை வனத்துறையினர் மீட்டு ஆசனூர் வனப் பகுதியில் விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் குட்டி யானை ஒன்று சுற்றி வந்தது. அநத குட்டி யானை அங்கிருநதவர்களின் பின்னால் ஓடியாடி விளையாடி படி இருந்து. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற வனத்துறையினர் குட்டியை மீட்டு சென்றனர். இந்த குட்டி யானை பண்ணாரி வனப்பகுதியில் விட்ட குட்டி யானை கடந்த நான்கு நாட்களாக யானை கூட்டத்தில் சேர்க்க முயற்சி செய்தும் யானைகள் கூட்டம் சேர்க்காததால் குட்டி வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் மீண்டும் திரும்பி வந்து விடுகிறது. இது குறித்து வன ஆர்வலர்கள் கூறும் போது இரண்டு மாத குட்டி யானை என்பதால் புட்களை தின்னாது. பால் மட்டுமே குடிக்கும் மேலும் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும் போது அங்கிருந்தவர்களிடம் பழகிக் கொண்டது. மனிதர்களிடம் பழகிய குட்டி யானையை யானைகள் கூட்டம் ஏற்காது என்பதால் யானைகள் வளர்க்கும் முகாமில் கொண்டு சென்று வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்றனர்.

Tags

Next Story