வங்கி அதிகாரியான மாற்றுத்திறனாளி - கைகொடுத்த கலைஞர் நூற்றாண்டு நூலகம்

வங்கி அதிகாரியான மாற்றுத்திறனாளி - கைகொடுத்த கலைஞர் நூற்றாண்டு நூலகம்

ஶ்ரீகாந்த்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம். பிரமாண்ட கட்டிட அமைப்புடன் கட்டப்பட்ட இந்த நூலகத்தில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளது. தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இங்கு குழந்தைகள் முதல் ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்விற்கு ும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உள்ளது. தற்போது இங்கு ஏராளமான மாணவர்கள் போட்டிதேர்விற்காக பயின்று வருகின்றனர்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 4 மாதங்களாக படித்த பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஶ்ரீகாந்த் பார்வையற்ற மாற்றுத்திறனாளி, ஶ்ரீகாந்தின் தந்தை மாரிமுத்து ஆட்டோ ஒட்டுநராக பணி செய்து வருகிறார். தாய் அங்குச் செல்வி வீட்டு வேலை செய்கிறார். வீட்டுக்கு ஒரே மகனான உள்ள ஶ்ரீகாந்த் தனது கடின உழைப்பின் காரணமாக பி.ஏ., பி.எட்., படித்தார், பின்னர் போட்டி தேர்வு எழுதி அரசு பணிக்கு செல்ல வேண்டும் என விருப்பமாக கொண்ட ஸ்ரீகாந்த் டி.என்.பி.எஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பாக மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களை தொடங்கியுள்ளார், 4 மாதங்களாக இடைவிடாது படித்த ஸ்ரீகாந்த் தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வில் வெற்றி பெற்று வங்கி உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் பங்கின் தேர்வில் வெற்றி பெற முடிந்தது எனவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார், மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறினார்.

Tags

Next Story