இருதரப்பினர் மோதல் - 5 பேர் மீது வழக்கு பதிவு
காட்டுஎடையார் கிராமத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்
காட்டுஎடையார் கிராமத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்த காமன் மனைவி சின்னப்பிள்ளை(50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் கொம்பன் என்பவருக்கும் நிலப் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த சின்னப்பிள்ளை, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சின்னப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மகன் கொம்பன்,கொம்பன் மகன் ஏழுமலை, மாரியம்மாள் ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த கொம்பன் மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் காமன் மகன் ஏழுமலை, மனைவி அருள் மணி ஆகியோர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story