ரயில் விபத்தை தடுத்த தம்பதி - முதல்வர் அளித்த வெகுமதி

X
தென்காசியில் ரயில் விபத்தை தடுத்த தம்பதியின் வீர தீர செயலை பாராட்டி அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தென்காசி அருகே செங்கோட்டை-கொல்லம் ரயில் தண்டவாளத்தில் கடந்த பிப்.25ம் தேதி நள்ளிரவு லாரி தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பார விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது தண்டவாளத்தில் சிறப்பு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதி தண்டவாளத்தில் ஓடி, டார்ச் லைட்டில் சைகை காண்பித்து பெரும் விபத்தை தடுத்தனர். இந்த வீரதீர செயலை பாராட்டி இவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரூ.5 லட்சம் வழங்க நேற்று உத்தரவிட்டுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி இப்போது மக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
