நாகப்பட்டினம் பெயர் கொண்ட டச்சு நாணயம்
டச்சு நாணயம்
நாகப்பட்டினம் தமிழ்நாட்டின் அழகிய கடற்கரை நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் வரலாற்று ரீதியாகவும் தற்காலத்திலும் பெருமைப்பட வேண்டிய பல விஷயங்களைக் தன்னுள்ளே கொண்டுள்ளது. நாகப்பட்டினத்தின் மகத்துவம் பற்றி பெரும்பாலன தமிழர்கள் கூட அதிகம் அறிந்திருக்கவில்லை.
ஒவ்வொரு வருடமும் புயல் தென்படும் ஊர் என்பதே நாகப்பட்டினம் பற்றி தமிழர் அறிந்துள்ள செய்தி. இந்தக் குறிப்பில், நாகப்பட்டினத்தின் மணிமகுடங்களில் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாணயங்கள் பல நூற்றாண்டுகளாக மக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளுக்காக புழக்கத்தில் உள்ளன.
ஆரம்பத்தில், முடியாட்சி அரசாங்கங்கள் பேரரசரின் பெயரைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டனர் ,பின்னர் ஜனநாயக அரசாங்கங்கள் நாட்டின் பெயரைக் கொண்ட நாணயங்களை வெளியிடுகிறது. வரலாற்றில் ஒரே ஒருமுறைதான், ஊரின் பெயருடன் நாணயங்கள் வெளியிடப்பட்டன. நாகப்பட்டினத்துக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. கி.பி 1680 இல், டச்சுக்காரர்கள் நாகப்பட்டினத்தை போர்த்துகீசியர்களிடமிருந்து கைப்பற்றினர்
மற்றும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் டச்சுக்காரர்கள் நாகப்பட்டினத்தை ஆண்டனர். நாகப்பட்டினத்தின் பொற்காலங்களில் இதுவும் ஒன்று. டச்சுக்காரர்கள் நாகப்பட்டினத்தில் ஒரு காசு தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவினர், அவர்கள் நான்கு வகையான நாணயங்களை அச்சு செய்து வெளியிட்டனர் மற்றும் இந்த நாணயங்கள் தமிழ்நாடு, இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்பட்டன.
நாணயங்கள் "நாகப்பட்டினம் பணம்" என்று அழைக்கப்பட்டன. 1. நகரின் பெயர் (நாகப்பட்டினம்) நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது 2. தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது 3. தெற்காசியா முழுவதும் டச்சுக்காரர்கள் எங்கு ஆட்சி செய்தாலும் தமிழ் எழுத்துக்கள் கொண்ட நாணயங்களை பயன்படுத்தினர். ஊரின் பெயரை தன்னகத்தே கொண்ட காசுகளை பெற்ற நாகப்பட்டினத்தின் புகழ் ஓங்குக....