கிராமத்திற்குள் காட்டெருமை கூட்டம் - வனத்துறையினர் விரட்டியடித்தனா்
கிராமத்துக்குள் புகுந்த காட்டெருமை கூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்
கிராமத்துக்குள் புகுந்த காட்டெருமை கூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கிராமத்துக்குள் காட்டெருமை கூட்டம் புகுந்தது. அதனை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்திற்குள் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக புகுந்தன. விவசாயி தனபால் என்பவரது தோட்டத்தில் முகாமிட்டு இருந்த இந்த காட்டெருமை கூட்டத்தை வனவர்கள் விஜயகுமார், முத்தமிழ் மற்றும் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று 6 மணி நேரம் போராடி மீண்டும் நெய்யமலை வனத்திற்குள் காட்டெருமைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால், இடையப்பட்டி பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மீண்டும் காட்டெருமை கூட்டம் கிராமத்திற்குள் புகாமல் தடுக்க, தும்பல் வனச்சரகர் சிவக்குமார் ஆலோசனையின் பேரில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டெருமைகள் நெய்யமலை வனப்பகுதியில் இருந்து இடையப்பட்டி கிராமத்துக்குள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags
Next Story