தங்கு கடல் மீன் பிடி தொழிலுக்கு அனுமதி வேண்டும் !

தங்கு கடல் மீன் பிடி தொழிலுக்கு அனுமதி வேண்டும் !

மீனவர்கள்

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கேரள மீனவர்கள் தமிழக கடற் பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் தங்கு கடல் மீன்பிடிப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என நான்கு நாட்கள் போராடிவரும் நிலையில் மீன்வளத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டு கொள்ளவில்லை.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தங்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் மேலும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்யும் பகுதிகளில் இரவு நேரங்களில் கேரள விசைப்படகு மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கேரள மாநில பதிவு என் கொண்ட ஒரு விசைப்படகு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 5 விசைப்படகுகள் என ஆறு விசைப்படைகள் மற்றும் 86 மீனவர்களை சிறை பிடித்து வந்தவுடன் மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் தொடர்பாக கூறுகையில் நான்கு நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தங்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கவும் தங்கள் பகுதியில் வந்து கேரளா மற்றும் கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழகம் முழுவதும் ஏப்ரல் மே மாதங்களில் அரசு சார்பில் மீன் இனப்பெருக்கத்திற்காக தடைக்காலம் விதிக்கப்படும் பொழுது விசைப்படகுகள் ம கடலுக்கு செல்லாத நிலையில் அந்த காலங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் தமிழக கடற்பகுதியில் மீன்பிடிப்பதால் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து வருகிறது இதையும் தடுக்க வேண்டும் என்றனர்.மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை தாங்கள் விடுவித்தும் அவர்களை தாங்கள் கொடுமைப்படுத்துவதாகவும் தாக்குவதாகவும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story