ஜெயங்கொண்டம் அருகே ஒருவர் கைது
குட்கா பறிமுதல்
.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எவரேனும் புகையிலைப் பொருட்களை வாகனங்களில் பதிக்கி வைத்து எடுத்து செல்கின்றனரா? என்பது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்..
அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் மூட்டையை வைத்துக்கொண்டு . சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 10 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 3 1/2 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சாக்கு முட்டையில் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் ஜெயங்கொண்டம் அண்ணா நகரைச் சார்ந்த பாஸ்கர் மகன் வசீகரன் (24) என்பதும்,புகையிலை பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் விசாணையில் தெரியவந்தது. இதையடுத்து வசீகரன் மீது வழக்கு பதிந்து கைது செய்து, விற்பனைக்காக சாக்கு மூட்டையில் கொண்டு சென்ற ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.