தாயார் இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவன்

விருதுநகர் அருகே தனது தாயார் இறந்த நிலையில் இறுதிச் சடங்கு செய்து விட்டு உடனடியாக பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவனின் மன உறுதியை எண்ணி பலர் நெகழ்ந்து போயினர்.

விருதுநகர் அருகே உள்ளது மீசலூர் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி இந்திரா(56). இவர்களது மகள் மகாலட்சுமி(16). மகன் ரமேஷ்கிருஷ்ணா(14). லட்சுமணன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்துவிட்டார். இதையடுத்து, தாயார் இரு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில், இந்திராவிற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், செவ்வாயன்று காலை உயிரிழந்தார்.

இந்தநிலையில், ரமேஷ்கிருஷ்ணாவிற்கு 9ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்துள்ளது தெரிய வந்தது. எனவே, தனது தாயாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரமேஷ்கிருஷ்ணா, பின்னர், தேர்வு எழுதுவதற்காக மீசலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த சக மாணவர்கள், ரமேஷ் கிருஷ்ணாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். தாயார் இறந்த அதே நாளில் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவனின் மன உறுதியை எண்ணி பலர் நெகழ்ந்து போயினர்.

Tags

Next Story