சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து - உயிர் தப்பிய பயணிகள்

சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து - உயிர் தப்பிய பயணிகள்

தீ விபத்துக்குள்ளான கார் 

அரக்கோணம் அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த 8 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திருத்தணி அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லக்கூடிய பிரதான சாலையாகும் திருத்தணி கனிகாபுரத்தை சேர்ந்தவர் சீனு திருமண நிகழ்ச்சி முடித்து உறவினர்களை திருத்தணியில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் விடுவதற்காக திருத்தணி அரக்கோணம் சாலையில் நான்கு சக்கரம் காரில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென காரில் முன்புறம் புகை வரத் தொடங்கியது.

உடனடியாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் கண்டு காரை ஓரமாக நிறுத்துவதற்குள் தீ மல மல என பரவியது .சற்றும் தாமதிக்காமல் அனைவரும் காரில் இருந்து இறங்கி ஓடத் தொடங்கினர். மேலும் தீயை அணிக்க அருகில் இருந்த தீயணைப்பு உபயோகர்களை பயன்படுத்தியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை தீயை அனைத்தனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story