3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி வழக்கு

3 குற்றவியல்  சட்டங்களை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி வழக்கு

உயர் நீதிமன்றம் 

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தி மொழியில் இயற்றப்பட்ட 3 சட்டங்களும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரியாத சட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்ற அதிகாரம் வழங்குகிறது.

வேறு மொழிகளில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சி மொழிச் சட்டப்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே நீதிமன்ற மொழிகளாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தி மொழியில் இயற்றப்பட்ட 3 சட்டங்களும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். 3 சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story